Muthulingam biography of william

முத்துலிங்கம் (கவிஞர்)

முத்துலிங்கம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்துலிங்கம் (பெயர் பட்டியல்)
முத்துலிங்கம் விருதுபெறுகிறார்

முத்துலிங்கம் (சு.

  • Biography rory
  • முத்துலிங்கம்) (பிறப்பு: மார்ச் 20, 1942) கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளராகச் செயல்பட்டார். எம்.ஜி. ராமச்சந்திரன் மீது உலா, அந்தாதி பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களை எழுதினார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராகப் பொறுப்பு வகித்தார்.

    பிறப்பு, கல்வி

    முத்துலிங்கம், மார்ச் 20, 1942 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடம்பங்குடி என்ற ஊரில் சுப்பையா சேர்வை-குஞ்சரம் அம்மாள் இணையருக்குப் பிறந்தார். சிவகங்கை அரசர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். வித்துவான் படிப்பில் சேர்ந்து பயின்றார். ஆனால், அப்படிப்பு பாதியில் நின்றது.

    தனி வாழ்க்கை

    முத்துலிங்கத்தின் மனைவி: லட்சுமி.

    மகள்: மோகனவல்லி.

    பாடல் பிறந்த கதை - கவிஞர் முத்துலிங்கம்

    இலக்கிய வாழ்கை

    முத்துலிங்கம் எழுதிய முதல் கவிதை சுரதா ஆசிரியராக இருந்த ‘இலக்கியம்’ இதழில் வெளியானது. தொடர்ந்து அவ்விதழிலும் 'தென்றல்' போன்ற இதழ்களிலும் பல கவிதைகள் வெளியாகின. தென்னகம் இதழில் எம்.ஜி. ஆர். மீது பிள்ளைத் தமிழ் எழுதினார்.

    முதல் கவிதைத் தொகுப்பு வெண்ணிலா, பாரதிதாசன் முன்னுரையுடன் வெளியானது. தொடர்ந்து பல கவிதைகளை எழுதினார். கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதை வாசித்தார். கவிதை, கட்டுரை, சிற்றிலக்கியம் எனப் பல நூல்களை எழுதினார்.

    இதழியல்

    முத்துலிங்கம், ஈ.வி.கே. சம்பத் நடத்திய 'தமிழ்ச் செய்தி' இதழில் ஆறு மாதங்கள் பணியாற்றினார்.

    கே. ஆர். ராமசாமியைச் சிறப்பாசிரியராகக் கொண்டு, வி.எஸ். ராசு என்பவருடன் இணைந்து ‘புரட்சிக் குயில்’ என்ற இதழை நடத்தினார். 1966 முதல் 1972 வரை 'முரசொலி' இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். 1972 முதல் 1975 வரை 'அலை ஓசை' இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார்.

    திரைவாழ்க்கை

    முத்துலிங்கம், இயக்குநர்கள் பாலமுருகன், பி. மாதவன் உள்ளிட்டோரால் ஆதரிக்கப் பெற்று, திரைப் பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் பெற்றார்.

    ‘தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா’ என்னும் முத்துலிங்கத்தின் முதல் பாடல், ஜி.கே. வெங்கடேஷ் இசையமைத்த ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ திரைப்படத்தில் இடம் பெற்றது. நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் முத்துலிங்கத்தின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு அவருக்குப் பல வாய்ப்புகளை வழங்கினார். தொடர்ந்து கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, டி.ஆர்.பாப்பா, சங்கர்-கணேஷ், கங்கை அமரன், வித்யாசாகர், சந்திரபோஸ், தேவா, லட்சுமிகாந்த் பியாரிலால், மனோஜ் கியான், மரகதமணி, அம்சலேகா, பாலபாரதி, சௌந்தர்யன் எனப் பலரது இசையில் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார்.

    முத்துலிங்கம், மொழி மாற்றுப் படங்களுக்காகப் பல பாடல்களை எழுதினார். ‘ராசியான வாழ்க்கை’ என்ற பெயரில் படம் ஒன்றைத் தயாரித்தார்.

  • Actor biography
  • பாடல் பதிவுடன் படம் நின்றுபோனது. இன்றைய இளம் இயக்குநர்களின் படங்களுக்கும் முத்துலிங்கம் பாடல்கள் எழுதி வருகிறார்.

    முத்துலிங்கம் பாடல்கள்

    1500-க்கும் மேற்பட்ட பாடல்களை முத்துலிங்கம் எழுதினார். அவற்றில் சில:

    • தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து...
    • என்னை விட்டால் யாருமில்லை...
    • சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
    • காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து...
    • கூட்டத்திலே கோயில் புறா யாரை இங்கு தேடுதம்மா
    • மாஞ்சோலைக் கிளிதானோ...
    • பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்...
    • இதயம் போகுதே எனையே பிரிந்தே
    • பூபாளம் இசைக்கும் பூ மகள் ஊர்வலம்...
    • சின்னஞ்சிறு கிளியே சித்திரப் பூவிழியே
    • முதன் முதல் ராக தீபம் ஏற்றும் நேரம்...
    • மணியோசை கேட்டு எழுந்து...
    • விடலப்புள்ள நேசத்துக்கு...
    • என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்...
    • டாடி டாடி ஓ மை டாடி
    • செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா...
    • சின்னக் கண்ணன் தோட்டத்துப் பூவாக...
    • விருவிரு மாண்டி விருமாண்டி...
    • மாட விளக்கே...
    • ஆறும் அது ஆழமில்ல...
    • கருத்த மச்சான்...
    • பாட வந்ததோ கானம்
    • போடு தாளம் போடு...
    • ராகவனே ரமணா ரகுராமா..
    • காதல் மகராணி...
    • பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ஒட்டிக் கொள்ளும்...
    • வா வா பக்கம் வா...
    • சின்னச் சின்ன ரோஜாப்பூவே..
    • இதழில் கதை எழுதும் நேரமிது...
    • தூது செல்வதாரடி...
    • கவிஞர் முத்துலிங்கம் பாடல்கள்
    • கவிஞர் முத்துலிங்கம் திரைப்படப் பாடல்கள்

    அரசியல்

    முத்துலிங்கம், திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராகச் செயல்பட்டார்.

    எம்.ஜி. ஆர். அதிலிருந்து வெளியேறிய பிறகு எம்.ஜி.ஆரை ஆதரித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து செயல்பட்டார்.

    பொறுப்பு

    • தமிழகச் சட்டமன்ற மேலவை உறுப்பினர்
    • தமிழக அரசின் அரசவைக் கவிஞர்

    தனிவாழ்க்கைச் செய்தி

    முத்துலிங்கம் ஒரு பேட்டியில் அவருக்கு துயிலின்மை( Insomniya) என்னும் நோய் இருப்பதாகவும், பல பத்தாண்டுகளாக முறையாகத் தூங்குவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

    கவிஞர் முத்துலிங்கம் ஆர்.எம். வீரப்பன், நல்லிகுப்புசாமி செட்டியார், ஏர்வாடி ராதாகிருஷ்ணன் உடன்

    விருதுகள்

    • தமிழக அரசின் சிறந்த திரைப்படப் பாடலாசிரியர் விருது
    • தமிழக அரசின் கலைமாமணி விருது
    • பாவேந்தர் பாரதிதாசன் விருது
    • கலைத்துறை வித்தகர் விருது
    • கவிக்கோ விருது
    • எம்.ஜி.ஆர்.

      உலகப்பேரவை விருது

    • எ,ஜி.ஆர். கழக விருது
    • நடிகர் சங்கம் வழங்கிய கலைச்செல்வம் விருது
    • சேலம் தமிழ்ச் சங்க விருது
    • சிறந்த பாடலாசிரியருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது
    • கபிலர் விருது
    • தினத்தந்தி இதழ் அளித்த சி.பா. ஆதித்தனார் விருது
    • கண்ணதாசன் விருது
    • வாலி விருது
    • ஆற்றங்கரை இலக்கிய அமைப்பு வழங்கிய சாதனையாளர் விருது
    • சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் கௌரவ டாக்டர் படம்
    கவிஞர் முத்துலிங்கம் வாழ்க்கைக் குறிப்பு நூல்

    ஆவணம்

    கவிஞர் முத்துலிங்கம் பற்றி முனைவர் அரங்க லோகாம்பாள், ‘கவிஞர் முத்துலிங்கம்’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

    மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையுடன் இணைந்து கலைஞன் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

    இலக்கிய இடம்

    முத்துலிங்கம் மரபிலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர். முத்துலிங்கத்தின் பாடல்கள் சிலவற்றைத் தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தி வென்றார் எம்.ஜி.

    ராமச்சந்திரன். முத்துலிங்கம், சந்தத்துக்கு முக்கியத்துவம் அளித்து சொல்லாட்சியும், அழகியல் தன்மையும் கொண்ட பல பாடல்களை எழுதினார். நா. காமராசன், புலமைப்பித்தன் வரிசையில் இலக்கியச் செறிவுள்ள பல திரைப்பாடல்களைத் தந்த திரைப்பாடல் ஆசிரியராக முத்துலிங்கம் அறியப்படுகிறார்.

    எம்.ஜி.ஆர். பிள்ளைத் தமிழ் - கவிஞர் முத்துலிங்கம்

    நூல்கள்

    கவிதை நூல்கள்
    • வெண்ணிலா
    • முத்துலிங்கம் கவிதைகள்
    • உலாப் போகும் ஓடங்கள்
    • பூகம்ப விதைகள்
    சிற்றிலக்கியம்
    • எம்.ஜி.ஆர்.

      பிள்ளைத்தமிழ்

    • எம்.ஜி.ஆர். உலா
    • எம்.ஜி.ஆர். அந்தாதி
    கட்டுரை நூல்கள்
    • என் பாடல்கள் சில பார்வைகள்
    • காற்றில் விதைத்த கருத்து
    • பாடல் பிறந்த கதை (கட்டுரை)
    • ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே
    திரைப் பாடல் நூல்கள்
    • திரை இசைப் பாடல்கள் (இரண்டு தொகுதிகள்)
    • முத்துலிங்கம் திரைப்பாடல் முத்துக்கள்

    உசாத்துணை



    ✅Finalised Page


    முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2023, 06:34:39 Pass through